Categories
லைப் ஸ்டைல்

“கார்டியோ VS வெயிட்”… எது பெஸ்ட்… தெரிஞ்சுக்கோங்க மக்களே…!!!

தினமும் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளில் கார்டியோ மற்றும் வெயிட் லிப்டிங் பயிற்சிகளில் எது சிறந்தது என பார்க்கலாம் வாருங்கள்.

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அபார நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல்பருமன் அதிகரிக்கிறது. அவ்வாறு உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்வார்கள்.

அதுமட்டுமன்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். எந்த ஒரு உடற்பயிற்சியையும் சரியான அளவே மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு உடற்பயிற்சி செய்வதில் கார்டியோ மற்றும் வெயிட் லிப்டிங் என்ற இரண்டு வகையான பயிற்சிகள் உண்டு. அது இரண்டுமே உடலுக்கு நன்மை செய்பவை தான். கார்டியோ பயிற்சி செய்தால் இதய செயல்திறன் அதிகரிக்கும். பதற்றம் குறையும். நல்ல தூக்கம் வரும். ரத்த ஓட்டம் சீராகும். அதிக கலோரிகளை எரிக்கும்.

இதனை அடுத்து வெயிட் பயிற்சிகளால் எலும்புகள் மற்றும் தசைகள் மேலும் வலுவாகும். உங்கள் உடலின் தோற்ற நிலை மேம்படும். ஹார்மோன் செயல்பாடு சீராகும். மனசோர்வு தணியும். கலோரிகள் இருக்கும். மேலும் சில நன்மைகள் இதில் நிறைந்துள்ளன. ஆகவே இரண்டு வகைப் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்வது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

Categories

Tech |