Categories
மாநில செய்திகள்

மக்களே! தமிழகம் முழுவதும் பெயர் மாற்ற… ஏப்ரல்-1 முதல் – அறிவிப்பு…!!

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் இணையவழி விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மின்சார வாரியம் மூலமாக அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக மின்சார இணைப்பு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோர், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் இணையவழி விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதன்படி விற்பனை, பகிர்ந்தளித்தல், ஒப்படைப்பு, உரிமையாளர் இறப்பு போன்ற காரணங்களால் சம்பந்தப்பட்ட இணைப்புகளின் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிப்போர் தங்களுடைய பெயர், முகவரி, மொபைல் எண், தற்போதைய உரிமையாளர் பெயர், இணைப்பு எண் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |