Categories
லைப் ஸ்டைல்

பெண்களே இத மட்டும் செய்யாதீங்க… கொஞ்சம் படிச்சி பாருங்க…!!!

பெண்கள் இதையெல்லாம் செய்வதால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் இந்திய பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 14 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மரபியல் மற்றும் வெளிப்புற காரணிகள் மார்பக புற்றுநோய்க்கு காரணம். முப்பது வயதை எட்டியவர்கள் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் புற்றுநோய் அறிகுறிகள் இருந்தால் முன்கூட்டியே கண்டறிந்து ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும். 40 வயது கடந்த பெண்கள் முதல்வர் ஆலோசனைப்படி மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்வது அவசியம்.

அவ்வாறு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. மரபியல் மற்றும் குடும்ப உடல் பாரம்பரியம் காரணமாக மார்பகப் புற்று நோய் வர வாய்ப்புண்டு. உடல் உழைப்பு இல்லாத சோம்பலான வாழ்க்கை முறை. தாமதமாக குழந்தை பெறுதல் அல்லது குழந்தையின்மை. வாய்வழி கருத்தடை முறைகள். மிக குறைந்த வயதில் பூப்படைதல். தாமதமாக மாதவிடாய் நிற்றல். அதிகமாக மது அருந்துதல், புகைப்பிடித்தல், இளம் வயதில் உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் சத்தற்ற உணவு பழக்கம் போன்றவை மார்பக புற்றுநோய் வரும் ஆபத்தை அதிகரிக்கும்.

Categories

Tech |