Categories
தேசிய செய்திகள்

90 நாட்கள் தொடர்ந்து பறக்கும் ட்ரோன்…. இந்தியா தயாரிக்கிறது…!!

இந்திய படைகளுக்கு உதவுவதற்காக 90 நாட்களுக்கு தொடர்ந்து பறக்கும் அதிநவீன இன்பினிட்டி என்ற ட்ரோனை தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்த ட்ரோன் இன்னும் சில ஆண்டுகளில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எதிர்கால போர் தேவைகளை கருத்தில் கொண்டு மிக உயரத்தில் இயங்கக் கூடிய ட்ரோனை வடிவமைப்பதாக, அதில் ஈடுபட்டுள்ள முக்கிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இன்பினிட்டி ட்ரோனில் எஸ்.ஏ.ஆர் எனும் அதிநவீன ரேடார் உள்ளிட்டவை இருப்பதால்  எதிரி எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி கண்காணிக்கும்.

இந்த புதிய வகை இன்பினிட்டி ட்ரோன்களால் தாக்குதல் நிகழ்வுகளை நேரலையாக கண்காணிப்பு நிலையங்களுக்கு ஒளிபரப்ப முடியும். பாதுகாப்பு படைக்கு மட்டுமின்றி. பேரிடர் மேலாண்மை, இயற்கை வள மேலாண்மை ஆகிய சேவைகளையும் இது உதவியாக இருக்கும். கடலோரங்களை கண்காணிக்க கப்பல் அமைச்சகமும் இதனை பயன்படுத்தலாம்.

Categories

Tech |