Categories
தேசிய செய்திகள்

“உச்ச நீதி மன்றத்தில் வரிசையாக சர்ச்சசைகுள்ளாக்கிய பாலியல் தீர்ப்புகள்”…? அதைப் பற்றிய ஒரு தொகுப்பு..!!

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் கொடுக்க உருவாக்கப்பட்டதே சட்டங்கள். என்றாலும், சட்டம் தோன்றிய நாளிலிருந்தே தொடர்ந்து வரும் கொடுமைகளில் ஒன்று, சில சட்டப்பிரிவுகளே தப்பிக்கும் சந்துகளாகக் குற்றவாளிகளுக்கு வழிவிடுவதுதான். பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கு ஒன்றில், குற்றம் சுமத்தப்பட்டவருக்குச் சாதகமாக சமீபத்தில் அப்படி ஒரு தீர்ப்பை, ஒரு பெண் நீதிபதியே வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை நாடு முழுக்க உருவாக்கியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய 39 வயது ஆண் மீதான மேல்முறையீட்டு வழக்கு, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையின் விசாரணைக்கு வந்தது. அதிகபட்சம் 8 ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களுக்கான போக்சோ சட்டப் பிரிவின் கீழ்தான் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சட்டப்பிரிவின்படி தண்டிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, ஐபிசி 354-ன் கீழ், ஓராண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 500 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.

இதுகுறித்து தீர்ப்பில் நீதிபதி அளித்திருக்கும் வியாக்கியானம், அந்தக் குழந்தைக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக் கெல்லாம் மேலான கொடூரமே.
‘‘ஆடைக்கு மேலே கை வைத்து மார்பை அழுத்தினார் என்றுதான் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குற்றம்சுமத்தப்பட்டவரின் கைகள் நேரடியாக சிறுமியின் மார்பகத்தில் படவில்லை என்பதால் இது பாலியல் தாக்குதல் ஆகாது. தோலும் தோலும் தொட்டுக்கொள்ளும்படி செய்யப்படும் அத்துமீறல்தான் பாலியல் தாக்குதல்’’

கடந்த காலங்களில் காணப்பட்ட பல சமூகக் குற்றங்கள் படிப்படியாகக் குறைந்தும், சில குற்றங்கள் மறைந்தும் வருவதைப் பார்க்கிறோம். ஆனால், பெண் இனத்துக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மட்டும் எப்போதும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில் நம்பிக்கையாக இருக்கும் நீதிமன்றமும், குற்ற பதிவுகளை சட்டதிர்கேற்றார் போல வரைமுறைகள் கொண்டு வரும் முனைப்பில், குற்றவாளிக்கு சலுகை வழங்கும், ரீதியில் வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு, நம் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை மேலும் மேலும் கேள்விக்குள்ளாகச் செய்துவிடாதா?

போக்சோ சட்டங்களின் பின்விளைவுகளை விளக்கும் நீதிமன்றம், அதன் அடிப்படை காரணங்களை மறப்பது சரியா? இந்தத் தீர்ப்புக்கு நாடெங்கும் எழுந்த எதிர்ப்பின் விளைவாக, உச்ச நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்புக்கு தடை விதித்திருப்பது, குறைந்தபட்ச ஆறுதல். அதேநேரம், மறுநாளே வந்த குழந்தைக்கு எதிரான மற்றொரு பாலியல் வழக்கில், 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை விடுவித்து, மேலும் அதிர்ச்சி கூட்டியிருக்கிறது. இதற்காக வழங்கப்பட்ட விளக்கமோ..

“ஐந்து வயதுப் பெண் குழந்தையின் முன்பாக பேன்ட் ஜிப்பை அவிழ்த்துவிட்டு நின்றார் என்பது பாலியல் குற்றத்தின்கீழ் வராது’’ என்பதுதான். இயந்திரத்தனமானத் தீர்ப்பை விட்டுவிட்டு, சட்டங்களின் உருவாக்கியதன் அடிப்படைகளை, வெகு சீக்கிரமாக வரைமுறைகளுக்குள் நீதிமன்றங்கள் கொண்டு வர வேண்டும்.

Categories

Tech |