நடிகர் அஜீத் மீது தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் அஜித். அவர் அனைவராலும் தல என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு பல்வேறு இயக்கங்கள் தொடங்கப்பட்டு அதன் மூலம் ரசிகர்கள் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜீத் மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் நடிகர் அஜீத் மீது புகார் அளித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு 6 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை இதுவரை அவர் திரும்ப தரவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.