இந்தியாவில் பள்ளி செல்லும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கூறுவன பாதிப்பு குறைந்து வரும் நிலையில், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பள்ளி செல்லும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், ஒருவருக்கொருவர் உணவு பகிர்தலை தவிர்க்க வேண்டும். இருமல், தும்மல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வகை அறிகுறிகள் உள்ள மாணவர்கள் பள்ளி செல்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் குளித்து விடவும். முக கவசத்தை வெந்நீரில் துவைக்கவும். பெஞ்ச் மற்றும் நாற்காலியில் முகப்பாக செட்டை கழற்றி வைப்பது. மூக்குக்கு கீழே இழுத்து வைப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.