ஹரியானாவில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் என்பவர். இவரது மனைவிக்கும் நித்தின் என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தினேஷ் தன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார்.அதனால் தனது தொடர்புக்கு தடங்களாக இருக்கும் கணவரை மனைவி கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி நிதின் உதவியுடன் 3 நண்பர்களை சேர்த்து கொண்டு மனைவி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தினேஷை கட்டையால் தலையில் அடித்தும் கழுத்தை நெறித்தும் கொலை செய்தனர். அதன்பின் அவரது சடலத்தை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தனர். சில நாட்களில் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
அதன் பிறகு இதிலிருந்து தப்பிப்பதற்காக சடலத்தை எடுத்து சென்று வாய்க்காலில் வீசினர். வாய்க்காலில் சடலம் இருப்பதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தினேஷின் உடலை மீட்டு விசாரணை செய்து வந்தனர். அதன்படி அவரது மனைவியுடனும் விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை செய்தார். அப்போது மனைவி குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன்பின் அவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நிதின் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.