கவின் நடிப்பில் உருவாகிவரும் ‘லிப்ட்’ படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் கவின் .இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார் . தற்போது இவர் நடிப்பில் ‘லிப்ட்’ திரைப்படம் தயாராகி வருகிறது .
இந்த படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா இந்தப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .