Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தடை…. இனி சட்டம் நிச்சயம் பாயும்… நாளை முதல் தமிழக அரசு அதிரடி …!!

ஆன்லைன் ரம்மி போன்ற இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து ஈடுபடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்களுடைய பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடும் அவலத்தை தடுத்துவிடும் விதமாக கடந்த நவம்பர் மாதம் அவசர சட்டத்திற்கான ஒப்புதல் தமிழக ஆளுநர் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்றைய கேள்வி நேரத்திற்குப் பிறகு இதற்கான சட்ட மசோதாவை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். மசோதாவில் பணம் வைத்து ஈடுபடுவோரையும் அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் போன்ற உபகரணங்களை தடை  செய்ய வழிவகை பட்டுள்ளது.

இந்த தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அவதாரமும், 6 மாத  சிறை தண்டனையும் வழங்கவும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும், இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் வழங்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்டங்கள் நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுப்பதற்கும் இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா நாளைய கூட்டத்தொடரின் போது ஒருமனதாக நிறைவேற்றப்படவுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |