Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் தனபாலை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி..!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் தனபாலை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். 

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடர்பாக அதிமுக தலைமை கழகம் இன்று அறிக்கை ஒன்றை  வெளியிட்டது. அதில், தமிழ் நாடு சட்டப்பேரவையில், 2019-2020 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ், முதல்வர்  எடப்பாடி பழனிசாமி  ஆகியோர் தலைமையில், வருகிற 28-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 11.30 மணிக்கு எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில்   கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும், அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Image result for சபாநாயகர் தனபால், பழனிசாமி

சட்டப்பேரவை கூடும் முன்பு  வழக்கமாக ஒவ்வொரு முறையும் சபாநாயகரை, முதல்வர் சந்தித்து பேசுவது வழக்கம். அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழகசட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை இன்று மதியம்  1.45 மணியளவில் அவரது அறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Categories

Tech |