Categories
தேசிய செய்திகள்

பாஜக ஆட்சியை இழக்கும்…! எச்சரிக்கும் விவசாயிகள்…. தொடரும் போராட்டம் …!!

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் நீடித்தால் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியை இழக்கும் என விவசாய சங்கத்தின் தலைவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 72 ஆவது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் சின்க் மாவட்டம் கண்டினு கிராமத்தில் விவசாய சங்கத்தினர் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். வேளாண் சட்டங்கள் ரத்து, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை காண சட்டப்பூர்வ உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை செயல்படுத்துவது, வேளாண் கடன்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

டெல்லியில் குடியரசு தினத்தில் நடைபெற்ற வன்முறைகளை அடுத்து விவசாய சங்கத்தினர் ஏராளமானோர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கலந்துகொண்ட பாரதிய கிசான் சங்க தலைவர் திரு ராகேஷ் பிரைட், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்றும்,

இதன்காரணமாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழக்க நேரிடும் என்றும் கடுமையாக எச்சரித்தார். இக்கூட்டத்தில் ராகேஷ் தனது பேச்சை தொடங்கும்போது விவசாய சங்கத் தலைவர் குழுமம் இருந்த மேடை சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேடை விபத்தை பொருட்படுத்தாமல் திரு பிரைட் அங்கு கூடியிருந்த விவசாயிகள் இடையில் உரையாற்றினார்.

Categories

Tech |