இங்கிலாந்தில் புதிதாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மீண்டும் வலுவடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .
2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதனை அடுத்து பல தடுப்பு நடவடிக்கையால் ஒவ்வொரு நாடுகளிலும் பாதிப்பு குறைந்தது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனிடையே புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த புதிதாக மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று 70% வேகமாக பரவும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மரபனு மாற்றம் அடைந்த வைரஸ் தெற்கு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பாதிப்பு வரும் நாட்களில்தான் தெரியும் என்றும் , புதிதாக உருமாறிய வைரஸுக்கு இந்த தடுப்பு மருந்து பலன் தருமா என்ற சந்தேகத்தையும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.