நம் உலகில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பெரும்பாலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணம் ஹயூமன் பாபில்லோமாவைரஸ். இது உடலுறவு மூலம் பரவுகிறது. வைரஸ்கள் 50க்கும் மேற்பட்டவை இருந்தாலும், இரண்டு வைரஸ் தான் 70 புற்றுநோய்க்கு காரணம்.
மாதவிடாய் காலம் 3 முதல் 7 ஏழு நாட்கள் இருக்கும். இறுதி நாட்களில் உதிரப்போக்கு குறையக்கூடும். ஒவ்வொரு மாதமும் அதிக அளவு உதிரப்போக்கு இருந்தாலோ அல்லது உதிரம் கட்டியாக வெளியேறினாலும் அது சாதாரணமானது தான். தொடர்ந்து நீண்ட நாட்கள் அவ்வாறு இருந்தால் அது பிரச்சனை கூறியது. இளம்பெண்களுக்கு தற்போது இந்த பிரச்சனை வருகிறது. இதற்கு காரணம் பிசிஓஎஸ் எனப்படும் அறிகுறிகளாக இருக்கலாம்.
நடுத்தர வயது அல்லது பிந்தைய பெண்கள் அதிகமான உதிரப்போக்கு காரணமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு அறிகுறியாகவும் இது இருக்கலாம். மாதவிடாய்க்கு பிந்திய உதிரப்போக்கு மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு என்பது ஒரு அறிகுறியாக இருந்தாலும், மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகு வரக்கூடிய உதிரப்போக்கு அசாதாரணமானது. அதிலும் மாதவிடாய் முழுமையாக நின்ற பிறகு சிறுதுளி உதிரம் வந்தாலும் அது மிக அசாதாரணமானது தான்.
இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் வெள்ளை படும் போது மோசமான அறிகுறி என்பதை உணர்ந்து மருத்துவரை அணுகுவது நல்லது. பெண்கள் மெனோபாஸ் எட்டும் காலத்தில் இயற்கையாகவே உடலுறவில் நாட்டம் இருக்காது. பெண் உறுப்பு வறட்சியாக இருக்கும். இக்காலத்தில் கருப்பை வாயில் தொற்று ஏதேனும் இருந்தால் அது மோசமான உடல் உபாதையை ஏற்படுத்தும். உடலுறவின் போது கடுமையான வலியை உண்டாக்கும். உடலுறவுக்குப் பின் உதிரப்போக்கு வெளிப்படலாம். அந்த உதிரப் போக்கு கருப்பை தொற்றாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உதிரப்போக்கு இயல்பானதுதான். பச்சை நிறத்தில் இருப்பது, வெள்ளைப்படுதல் அதிகரித்தல் போன்றவை எல்லாமே கருப்பை தொற்றுக்கான அறிகுறிகள். வெள்ளைபடுதல் அதிகம் ஆனால் கருப்பை தொற்று அல்ல. ஆனால் இதை அலட்சியம் செய்தால் தோற்று பெரிதாகி நாளடைவில் செல்களை பாதித்து புற்றுநோயை உருவாக்கும். எனவே மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.