கோடியக்கரையில் உள்ள வனவிலங்கு சரணாலயம் நேற்று முன்தினம் மாவட்ட வன அலுவலர் கலாநிதியால் திறக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் அருகில் பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மற்றும் உள் நாடுகளிலிருந்தும் பல்வேறு பறவைகள் வருவதுண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர், சுற்றுலா மையங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பத்து மாதங்களுக்குப் பிறகு கோடியக்கரை சரணாலயம் நேற்று பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயத்தை நாகை மாவட்ட வன அலுவலர் கலாநிதி திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வனத்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் சரணாலயத்தை சுற்றி பார்ப்பதற்கு சைக்கிள்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் கடுமையாக சேதமடைந்துள்ளது. பல மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. தற்போது மரங்கள் வளர்ந்து பச்சைப் பசேலென காணப்படுகின்றது. இந்த சரணாலயத்தில் மான், குதிரை, காட்டுப்பன்றி, நரி, முயல், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது