ஆஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் ஏற்கனவே ஏற்பட்ட காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான விலங்குகளும் சில மனிதர்களும் உயிரிழந்தன.ர் இப்போது மீண்டும் புதர்களில் காட்டுத்தீ பரவி உள்ளதால் அபாய நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் பெர்த் பகுதியில் பலமான காற்று வீசி வருவதன் காரணமாக தீ வேகமாக பரவி வரும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது .இதனால் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து பெர்த் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் சூடான வறண்ட வானிலை நிலை உருவாகியுள்ளதால் காட்டுத்தீ இன்னும் அதிகரிக்கலாம் என்று மக்களை அந்த நகரை விட்டு வெளியேறும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.