Categories
உலக செய்திகள்

ரஷ்யா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கவுள்ள இந்தியா… ஆகஸ்ட் மாதத்திற்குள் 300 மில்லியன் பேருக்கு தடுப்பூசி திட்டம்…!

இந்தியாவின் அவசரகால பயன்பாட்டிற்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது.

இந்தியா தனது அவசரகால பயன்பாட்டிற்காக ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஜனவரி மாத நடுப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 4 மில்லியன் பேர் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 300 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா இந்த மாத இறுதிக்குள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசரகால தடுப்பூசியாக அங்கீகாரம் அளிக்க உள்ளது.

இதுகுறித்து ரஷ்ய முதலீட்டு நிதி தலைவர் கிரில் டிமிட்ரிவ் கூறியதாவது, இந்தியா ஸ்புட்னிக்  தடுப்பூசி தயாரிப்பில் முக்கிய கூட்டாளி. இந்தியா இதற்கு அங்கீகாரம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கீகாரம் அளிக்கப்பட்டதும் உடனடியாக விநியோகம் தொடங்கும் என்று கூறினார். மேலும் ரஷ்யாவின் கொரானா வைரஸ் தடுப்பூசி ஸ்புட்னிக் வி 91.6% பயனுள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |