பிரிட்டனில் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களில் காதலன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த Tommy Hydes என்ற 24 வயதுள்ள இளைஞர் அவரின் மருமகனான Josh Hydes(20) என்பவருடன் கடந்த சனிக்கிழமையன்று காரில் சென்றுள்ளார். அப்போது இரவு 7 மணியளவில் Shefield ல் உள்ள பாலத்தில் இவர்களின் கார் சென்று கொண்டிருக்கையில் திடீரென்று பாலத்தின் இரும்பு பேரியரில் மோதி, நதியில் மூழ்கியுள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த Tommy Hydes மற்றும் Josh Hydes ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைத்தொடர்ந்து விரைவாக ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் Tommyக்கு April Rose என்ற மனைவியும் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பிறந்த குழந்தை ஒன்றும் உள்ளது.
இது குறித்து Tommyயின் மனைவி கூறுகையில், அவருக்கு விபத்து ஏற்படுவதற்கு 10 நிமிடம் முன்னர் தான் குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார். அப்போது வாகனத்தை Josh ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் எனக்கு காதலன் என்பதை தாண்டி நல்ல நண்பராகவும் இருந்தார். நான் அவரை மிகவும் அதிகமாக விரும்புகிறேன். என்னை அவரின் இழப்பு கொல்கிறது. இனிமேல் அவர் வர மாட்டார் என்பதை அறிந்தும் மனம் அதிகமாக வலிக்கிறது என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.