Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பிப்ரவரி 28 வரை அவகாசம் நீட்டிப்பு… முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வருமானவரி தொடர்பாக நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் இழுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க 2020 மார்ச்சில் “விவத் சேவ் விஸ்வாஸ்” என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவத் தொடங்கியதால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டனர். அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கொரோனா காரணமாக இந்தத் திட்டத்திற்கான அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை வருமான வரி வழக்குகளை முடிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவை வரி செலுத்துவோர் இந்த மாதத்திற்குள் விண்ணப்பித்து மார்ச் 31-ஆம் தேதிக்குள் வரி செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |