இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், இந்திய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் பங்கெடுத்து 12 மற்றும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 78 ஐபிஎல் போட்டியில் பங்கெடுத்து 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டில் பெங்கால் அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் களமிறங்கிய இவர், இதுவரை 420 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
முதல்தர கிரிக்கெட்டில் சிறந்த சராசரி 26 முறை 5 விக்கெட்டுக்கு மேல் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இவ்வாறு பல சாதனைகளைப் படைத்தவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.