Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

சின்னத்துக்கு தான் ஓட்டு போடுவோம்…! பல எதிர்பார்ப்பில் அதிமுக கோட்டை… சங்கரன்கோவில் தொகுதி ஓர் பார்வை …!!

சங்கரன்கோவில் தொகுதியில் கடந்த 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக மூன்று முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியை பொறுத்தவரையில் இது ஒரு தனித் தொகுதி என்பதனால் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் இங்கு வெற்றியை தீர் மாணிக்க கூடிய முக்கிய சக்திகளாக உள்ளனர். நகரின் பெருவாரியாக  வருவாய் ஈட்ட  இங்கு  விசைத்தறி தொழிலையே நம்பி இருக்கிறது. மேலும் சங்கரன்கோயில் தொகுதியில்  உள்ள சுற்றுப்புற பகுதிகளில் மல்லிகை, முல்லை, பிச்சி, கனகாம்பரம், செவ்வந்தி பூக்கள் விவசாயமும் செய்யப்படுகிறது.

மானாவாரி விவசாயத்தை பொறுத்தவரையில் நெல், சோளம், கேழ்வரகு, மக்காச்சோளம் இங்கு பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய சுற்றுலாப்பயணிகள் இங்கு இருக்கக்கூடிய புகழ் பெற்ற கோயிலான சங்கரன் நாராயணன் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் தனித்தொகுதி கடந்த 30 ஆண்டுகாலமாக அதிமுகவிடம் உள்ளது. ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர்  நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்.

தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,46,450 பேர். இது சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் 71 ஊராட்சிகள் கொண்ட தொகுதி. சங்கரன்கோவில் தொகுதியில் முக்கிய தொழில்களாக மானாவாரி விவசாயம், விசைத்தறி தொழிலும் உள்ளன. விசைத்தறி தொழிலில் ஈடுபடும் துணி உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் துணிகளை நேரடியாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

விசைத்தறி தொழிலை நவீனப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று  ஆதங்கப்படுகிறார்கள் விசைத்தறி  உற்பத்தியாளர்கள். இத்தொகுதியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். பூக்களுக்கு விலை இல்லாத போது அதனை கொள்முதல் செய்யும் வகையில் அரசு வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்கரன்கோவில் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 534 கோடியில் ராஜபாளையம் மற்றும் சிவகாசிக்கு தண்ணீர் வழங்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சங்கரன்கோவிலில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஜவுளி பூங்கா மற்றும் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளது. மழையை நம்பியே நடக்கும் மானாவாரி பாசனம் கால்வாய் பாசனமாக வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு சங்கரன்கோவில் தொகுதியில் கட்சி மற்றும் சின்னத்தை மட்டுமே பார்த்து வாக்களிக்கும் மக்கள் இங்கு ஏராளம் இருக்கிறார்கள். மேலும் ஒரே கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் இந்த முறை மாற்றம் ஏற்படலாம் என்று நம்ப்படுகிறது.

Categories

Tech |