Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒன்று சாப்பிடுங்க…” பல பிரச்சினைகளுக்கு இது தீர்வு”… நீங்களே பாருங்கள்…!!

தினமும் செவ்வாழை ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் பார்ப்போம்.

செவ்வாழை ஒரு அற்புதமான பழம். இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பழத்தை தினசரி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றது.

குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளதால் உடலை இதயநோய், புற்று நோயின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள பீட்டா-கரோட்டின் உடலுக்கு மிகவும் நல்லது.

இந்த  பழம் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ ஆக மாறி கண்களுக்கு ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க மாற்றுகிறது.

இதனை சாப்பிடும் போது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலில் இருந்து தடுக்கின்றது.

இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால் அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள்.

செவ்வாழை மற்ற பழங்களைவிட கலோரிகள் மிகவும் குறைவு. இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தினமும் ஒரு பழத்தை சாப்பிட்டால் கூட பல நன்மைகள் நம் உடலுக்கு வந்து சேரும். குழந்தைகளுக்கு இதனை கொடுத்தால் எலும்புகள் வளமாகும். ஆரோக்கியமாக இருப்பார்கள்.

Categories

Tech |