நடிகர் அஜித் ‘வலிமை’ பட அப்டேட் குறித்து ரசிகர்களிடம் பேசியுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை ‘. இயக்குனர் எச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்த படத்தைப் பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை . இந்நிலையில் ஹைதராபாத்தில் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்த சில ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து கேட்டுள்ளனர் . இதற்கு ‘மிக விரைவில்’ என அஜித் பதிலளித்துள்ளார் . இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .