Categories
தேசிய செய்திகள்

அறிமுகமானவுடன் கலக்கும்… இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம்… சந்தையில் செம வரவேற்பு…!!

இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம் தேசிய பங்குசந்தையில் இன்று அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ள இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் புதிதாக இன்றிலிருந்து அறிமுகமாகியுள்ளது. இந்த அலங்கார பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமானது பூனாவை சேர்ந்ததாகும். தற்போது இண்டிகோ பெயிண்ட்ஸ் 11, 684 கோடி சந்தை மதிப்பை பெற்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய பங்குச்சந்தையில் இந்நிறுவனத்திற்குரிய பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இதன்படி இந்த நிறுவனத்தில் ஒரு பங்கிற்கான தொகையின் அடிப்படை விலையானது ரூ.1,488 முதல் ரூ.1,490 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பானது சந்தை ஏலத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக ரூபாய் 2,607.50 என்று விற்பனையாகியுள்ளது. இவ்வாறு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டவுடன் இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனமானது அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

Categories

Tech |