Categories
உலக செய்திகள்

திடீரென மஞ்சள் நிறத்தில் மாறிய மனிதன்.. கண்டுபிடிக்கப்பட்ட கட்டிகள்… மருத்துவர்களின் கோரிக்கை…!

சீனாவில் ஒருவரின் தோல் நிறம் திடீரென மஞ்சள் நிறத்தில் மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் வசிக்கும் டியூ என்பவரது உடல் திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டியூ உடலில் இரண்டு கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் ஒரு கட்டி புற்றுநோய் கட்டி என்று தெரிவித்துள்ளனர். அது கணையத்தில் இருந்ததால் அவரது பித்தநீர் வெளியேற வில்லை.

பித்தநீர் வெளியேற்றாததால் தான் இவர் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. அதன்பின் மருத்துவர்கள் சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்த இரண்டு கட்டிகளையும் அகற்றினர். மேலும் டியூரின் இந்த கட்டிக்கான காரணங்களாக அவர் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரமாக மது அருந்தி வந்ததையும் சொல்லலாம்.

மேலும் புகை பிடிக்கும் பழக்கமும் அவருக்கு இருக்கிறது. ஆகவே தயவு செய்து மது அருந்துவதையும், புகை பிடிப்பதையும் நிறுத்துமாறு மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளனர். மஞ்சள் நிறமாக காட்சி அளிக்கப்பட்ட டியூவின் உடலில் இருந்த இரண்டு கட்டிகளை அகற்றிய பின் அவர் சாதாரண நிறத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |