Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை நானே விமர்சனம் செய்வேன்… ரசிக்கும் மக்கள்… இன்னும் சிறப்பா நடிக்கணும்…!!

தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்த சூர்யா தனது நடிப்பை தானே விமர்சனம் செய்வதாக கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாத்துறையில் இருப்பதாகவும், ஆனாலும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு வந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து சில நேரங்களில் தனது திரைப்படங்களை பார்க்க முடியாத சூழலில் 100 நாட்கள் காத்திருந்து அதனை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் படங்களில் தான் தவறு செய்துள்ளதை தவிர்த்து, மக்கள் அதனை ரசிப்பார்கள் என்று நினைப்பதாக கூறியிருக்கிறார்.

அதோடு தனது மனைவி மற்றும் சகோதரர்கள் நடிகர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் தனது நடிப்பை விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு நடிகனாக தான் நடித்த காட்சிகளை தானே கடுமையாக விமர்சனம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். அதோடு 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் இருந்தாலும் இன்னும் தனது சிறப்பான நடிப்பு திறமையை வெளிக்காட்டவில்லை என்றும், இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் என்று நினைப்பதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |