நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு சாதகமான தீர்ப்பை தொடர்ந்து வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என அதிர்ச்சி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மத்தியில் மும்பை நீதிமன்றம் பெண்கள் ஆடை அணிந்திருக்கும் போது மார்பை தொட்டால் அது பாலியல் குற்றமாகாது என பரபரப்பு தீர்ப்பை அறிவித்தது. அந்த தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரதட்சனை துன்புறுத்தலால் மும்பையில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதன் மேல் முறையீட்டு வழக்கில் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என தீர்ப்பளித்து குற்றவாளியை விடுதலை செய்துள்ளார் மும்பை நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேதிவாலா. இவர் ஏற்கனவே ஆடையோடு பெண் மார்பை தொட்டால் சிறுமியின் கையைப் பிடித்து இருந்தும் பேண்ட் ஜிப்பைத் திறந்தால் பாலியல் அத்துமீறல் ஆகாது என சர்ச்சையை ஏற்படுத்திய தீர்ப்புகளை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.