சீனாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பப் போலி தடுப்பூசி தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சீனாவில் மர்ம கும்பல்கள் சிலர் வெளிநாடுகளுக்கு அனுப்பவதற்காக போலி கொரோனா தடுப்பு ஊசிகளை தயாரித்து வந்தனர். அதனை தடுப்பதற்காக பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது ஒரு இடத்தில் போலி கொரானா தடுப்பூசிகளை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த போலி தடுப்பூசிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
காவல்துறையினரின் விரைந்த நடவடிக்கையால் போலி தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டது. இதுவரை இந்த குற்றத்தில் 80க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3000 போலி கொரோனா தடுப்பூசியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெய்ஜிங், ஹாங்காய் மற்றும் ஷாண்டோங் உள்ளிட்ட பல இடங்களில் போலி தடுப்பூசிகளை தயாரித்து வரும் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.