தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநரை புறக்கணித்துவிட்டு எதிர்கட்சியான திமுக கூட்டத்திலிருந்து வெளியேறியது.
இந்த வருடத்திற்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் ஆரம்பித்தது. அவர் பேசத் தொடங்கியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் கூச்சலிட தொடங்கின.
அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசலாம்,எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரை ஆற்றி வருகின்றார். ஆனால் ஆளுனர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.