அரசு அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பல லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியை சார்ந்தவர் கோபி. இவர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் தணிக்கை பிரிவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கோபியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அவர்கள் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தபோது அங்கிருந்து ஆறு வங்கி கணக்கு புத்தகங்கள், 50 லட்சம் மதிப்பிலான இதர ஆவணங்கள், 85 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலீசாரால் கொண்டுசெல்லப்பட்டதுடன் விசாரணைக்கு வருமாறு கோபியையும் அழைத்துச் சென்றுள்ளனர்.