தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டிற்கு அதிலிருந்து 5 லட்சத்தில் இருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10 சதவீதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 7 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 10 லட்சம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு 15 சதவீதமும், 10 லட்சத்திலிருந்து 12 லட்சத்து 50 ஆயிரம் வரை வருமானம் பெறுவோர் 25 சதவீதமும் வரி செலுத்த வேண்டும். 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவோர் 30% வரை வருமான வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே அளவீடு இருந்தது குறிப்பிடத்தக்கது.