Categories
மாநில செய்திகள்

வித்தியாசமான ஆசை… ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில்… மாலை மாற்றிய தம்பதி…!!

சென்னையை சேர்ந்த தம்பதியினர் ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் திருமணம் செய்துள்ளனர். 

தற்போது உள்ள இளம்ஜோடிகள் சாதாரண திருமணங்களை விரும்புவதில்லை. மாறாக தங்களின் திருமணங்களை வித்தியாசப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த வகையில் சென்னையை சேர்ந்த தம்பதிகள் தங்களின் திருமணத்தை வாழ்வில் மறக்க முடியாத தருணமாக மாற்ற ஆழ்கடல் 60 அடி ஆழத்தில் சென்று திருமணத்தை நடத்தியுள்ளனர். அதாவது சென்னையில் வசிக்கும் சின்னத்துரை என்பவர் பொறியியல் பட்டதாரி. இவருக்கும் ஸ்வேதா என்ற பெண்ணுக்கும் நிச்சயம் செய்யபட்டுள்ளது.

இதன்படி இவர்கள் இன்று காலையில் 6.30 மணியளவில் இந்து முறைப்படி ஆழ்கடலில் நீச்சல் அடிக்க கற்று தரும் டெம்பிள் அட்வென்சர் டிவ் என்ற மையத்தின் உதவியால் நீலாங்கரை கடற்பகுதியில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் 60 அடி ஆழத்தில் திருமணம் செய்துள்ளனர். மேலும் இந்து முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்தில் வாழை மரங்களும் தோரணங்களும் கட்டி மணமகன் வேஷ்டி சட்டையும் மணமகள் கூறப்புடவையும் உடுத்தியிருந்தனர். அதன் பின்பு ஆழ்கடலில் நீந்த தேவையான பிரத்யேக கருவிகளைப் பயன்படுத்தி ஆழ்கடலுக்குள் சென்று சின்னத்துரை ஸ்வேதாவின் கழுத்தில் உற்சாகமாக தாலி கட்டினார்.

இந்த திருமணம் குறித்து நீச்சல் அட்வென்சர் டிவ் மைய நிறுவனரான அரவிந்த் தருன்ஸ்ரீ என்பவர் கூறியுள்ளதாவது, சின்னதுரை எங்களது நீச்சல் மையத்தில் தான் நீச்சல் கற்றார். அப்போது தனக்கு திருமணம் நடைபெறப்போவதாக என்னிடம் தெரிவித்தார். அதற்கு வித்தியாசமான முறையில் உங்கள் திருமணத்தை நடத்தலாம் என்று அவரிடம் நான் கூறினேன். அதற்கு அவர் சம்மதித்த பின்பு மணமகளின் குடும்பத்தாரிடம் பேசினோம்.

அவர்கள் அனுமதி அளித்த பிறகு மணமக்கள் இருவருக்கும் மூன்று நாட்களாக நீச்சல் குளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு நாள் ஆழ்கடலில் திருமணம் செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதன்பின்பு திருமணத்திற்கான நேரத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தோம். எங்களின் எதிர்பார்ப்பின் படி கடலும் காலையில் அமைதியாகவே இருந்தது. அதன் பின்பு கடலிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் 60 அடி ஆழத்தில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |