Categories
அரசியல் மாநில செய்திகள்

வைரமுத்துவை அர்ரெஸ்ட் பண்ணாம கல்யாணராமனை மட்டும் ஏன் அர்ரெஸ்ட் பண்ணீங்க…? ட்வீட் செய்த H .ராஜா…!!

நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசிய கல்யாணராமனை  கைது செய்த காவல்துறையினர் ஆண்டாள் நாச்சியாரை விமர்சித்த வைரமுத்துவை ஏன் கைது செய்யவில்லை? என்று H.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட  பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் நபிகள் நாயகம் பற்றி இழிவாக பேசியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும்  அவருக்கு கண்டனம் தெரிவித்ததோடு  அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது.

இதனால் கல்யாணராமன் உட்பட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர்  H. ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் “ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க விதத்தில் விமர்சித்தவர் இந்து விரோதி வைரமுத்து. அவரை கைது செய்யாத காவல்துறையினர் கல்யாணராமனை மட்டும் கைது செய்துள்ளது பாரபட்சமானது கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |