பணம் கேட்டு மிரட்டியதோடு ஒருவரை அரிவாளால் தாக்கிய குற்றவாளியின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் மரவன்மடம் தம்பிக்கு மீண்டான் பகுதியில் வசித்து வரும் ஜெயமுருகன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சோரீஸ்புரம் பகுதியில் வசித்துவரும் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு, அவரை அரிவாளால் தாக்கி உள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜெயமுருகனை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் குற்றவாளியான ஜெயமுருகன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஜெயமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் ஜெயமுருகனை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்து விட்டனர்.