Categories
உலக செய்திகள்

2022 க்குள்ள 100 மில்லியன் டோஸ் வேணும்… ஒப்பந்தம் செய்யப் போகும் பிரிட்டன்…!

வால்னேவா நிறுவனத்திலிருந்து 100 மில்லியன் தடுப்பூசிகளை பெறுவதற்கு பிரிட்டன் இன்று ஒப்பந்தம் செய்ய உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள வால்னேவா மருந்து தயாரிப்பு நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் அரசு அந்நிறுவனத்திடம் ஏற்கனவே 60 மில்லியன் தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது. தற்போது கூடுதல் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் 100 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து வருகின்றது. இதனால் வரும் 2022க்குள் மேலும் கூடுதலாக 40 மில்லியன் தடுப்பூசிகளை வால்னேவா வழங்க வேண்டும் என்று பிரிட்டன் இன்று ஒப்பந்தம் செய்கிறது. இந்த ஒப்பந்தம் முடிந்தபின் 2021 – 2022ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 400 மில்லியன் தடுப்பூசியை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் மிக்கது என்று நிரூபிக்கப்பட்டவுடன் அதை வழங்க ஸ்காட்லாந்து தயாராக உள்ளது. இதனை வினியோகிக்க தொடங்கியதும் அரசு அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |