Categories
சினிமா தமிழ் சினிமா

அனல் பறக்கும் நடிகர் சங்க தேர்தல் களம்…படப்பிடிப்புகள் ரத்து..!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருவதன்  காரணமாக இன்று ஒருநாள் படப்பிடிப்பானது ரத்து  செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

Related image

இந்நிலையில் பிரபல நடிகர்கள் முதல் சின்னத்திரையில் நடிக்கும் சிறிய நடிகர்கள், நாடக நடிகர்கள் உட்பட அனைவரும் தங்களது வாக்கை பதிவு செய்ய தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்கின்றனர். மேலும் அனைத்து நடிகர் நடிகைகளின் வாக்குகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் இன்று ஒரு நாள் சினிமா உலகில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |