நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்திருக்கிறார்.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முன்னாள் மக்களவை துணை சபாநாயகராகவும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை. பிரதமர் மோடியை இந்த தருணத்தில் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத்திலேயே ஒருபக்கம் அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் புதிதாக என்னென்ன நிகழ்வுகள் ஏற்படுமோ என்று எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார். அத்துடன் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியும் வருகை தர இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. ஏற்கனவே வி.கே சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகிறார். அதையடுத்து அரசியல் ரீதியாக ஏதேனும் திருப்பங்களை ஏற்படுமா ? என தமிழக அரசியலில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி வந்து பிரதமரை சந்தித்து விட்டு சென்னை திரும்புவதற்கு முன்பாக தான் சசிகலா அதிமுகவில் சேருவதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லியிருந்தார். அத்தகைய சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மிகவும் முக்கியமாக இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்த தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.