Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதியை நம்பாதீங்க… தேர்தலில் விரட்டியடிப்போம்… ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை…!!

உதயநிதி ஸ்டாலின் வேல் ஏந்திய படி இருக்கும் புகைப்படம் குறித்து பாஜக நிர்வாகியான நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். 

சமீபத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தன் கையில் வேல் ஒன்றை ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வெளியானது. இதனை பாஜகவினர் கடுமையாக எதிர்த்தனர். இந்நிலையில் தற்போது  மு.க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினும் தன் கையில் வேல் ஒன்றை ஏந்தியவாறு இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பாஜக நிர்வாகியான நடிகை காயத்ரி ரகுராம் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நேற்று ஸ்டாலின் வேல் ஒன்றை வைத்துக்கொண்டு இந்துக்களை ஏமாற்றினார். இன்று அவருடைய மகனான உதயநிதி வேலை வைத்து நாடகமாடுகிறார். விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் படத்தை என் மகள் கேட்டதற்காக டுவிட்டரில் பதிவு செய்ததாக உதயநிதி அன்று கூறினார். இன்று தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்காக தன் தந்தையுடன் இணைந்து நாடகமாடுகிறார். இந்துக்களே உஷார்! இவர்கள் எவ்வளவு வேஷம் போட்டாலும் வரப்போகும் தேர்தலில் இந்துக்களின் விரோதிகளை விரட்டுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |