மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அண்ணாநகரில் நவீன் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மருந்து கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் வேலை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் மஞ்சளகிரி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவீன் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.