இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில் யாஷிகா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் வெளியான இறைவி , மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார் . மேலும் இவர் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .
இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கடமையை செய்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை முத்தின கத்திரிக்காய் பட இயக்குனர் வெங்கட்ராகவன் இயக்கவுள்ளார் . இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை யாஷிகா நடிக்க இருக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது .