முன்னாள் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜேர்டு குஷ்னருக்கு நோபல் அமைதி பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்காவின் கணவர் ஜேர்டு குஷ்னர். இவர், டிரம்ப்பின் ஆலோசகராகவும் வெள்ளை மாளிகையில் பதவி வகித்தார். இவரது பதவிக்காலத்தில், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தார். இந்த பணியை கவுரவிக்கும் வகையில், நோபல் அமைதிப்பரிசு வழங்க வேண்டும் என்று, பரிந்துரை செய்வோரில் ஒருவரான ஹார்வார்டு சட்டப்பள்ளி பேராசிரியர் ஆலன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் உடன், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சூடான், மொராக்கோ ஆகிய நாடுகள் சமாதான ஒப்பந்தம் செய்வதற்கு குஷ்னர் வழிவகுத்தார் என்பது பரிந்துரைக்கான காரணமாகும்.