Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்…. ஆர்ப்பாட்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளிகள்….!!

சுமைதூக்கும் தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து நாகையில் ஆர்ப்பாட்டத்தில் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் ஏ.ஐ.டி.யூ.சி தொழில் சங்கத்தினர் நாகை மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு எடைக்கு ஏற்ற கூலி உள்ளிட்டவைகள் தனியாருக்கு இணையாக மூட்டை ஒன்றுக்கு 15 வழங்க வேண்டும், சுமைதூக்கும் தொழிலாளர் கூலி விவரங்களை கையடக்க கருவியில் பதிவு செய்து அதை மாதம் 5ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்,

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 10,000 மாதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும், நெல் கொள்முதல் செய்வதற்கு சணல் சாக்கு உள்ளிட்ட தளவாட பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும், கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ஊதியம் ரூபாய் 20 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து கிடங்குகள் மற்றும் சேமிப்பு நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரிப்பு அடையாள அட்டையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் ராமன், தொழிலாளர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜ்மோகன், மாநில செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்ட நுண்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |