பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுடிவாக்கம் பகுதியில் பிரீத்தி ஷீலா என்பவர் வசித்துவருகிறார். இவர் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவனை பிரிந்த இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளதால் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரீத்தி திடீரென அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். அதன் பின் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பிரீத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவனை பிரிந்து வாழும் பிரீத்தி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதும், அடிக்கடி கோபத்தில் தனது தாய் மற்றும் சகோதரனிடம் சண்டை போட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.