நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் விஷால் தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தலை நடத்திக்கொள்ளலாம். இதற்க்கு மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால , நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.