கரூர் மாவட்டம் கொசூரில் அரசின் மினி கிளினிக்கில் புதிதாக கட்டப்பட்ட கைப்பிடிச்சுவர் இடிந்து 2 குழந்தைகள் காயம் அடைந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழக பொதுச்செயலாளர் திரு டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அமமுக பொது செலாளர் திரு டி டி வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கரூர் மாவட்டம் கொசூரில் பழைய கட்டிதத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் மினி கிளினிக் திறப்பு விழாவின் போதே அங்கு புதிதாக கட்டப்பட்ட கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து இரு குழந்தைகள் காயம் அடைந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த அளவிற்கு தரமில்லாத கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதித்து யார் ? அதனை சோதித்துப் பார்க்காமல் திறப்பு விழா நடத்தப்பட்டது ஏன் ? என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தரமில்லாத கட்டுமானத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திரு. டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.