பள்ளிகளில் 7500 வகுப்புகள், 80,000 ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அருகே அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான விழாவில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை பாராட்டியுள்ளார். கல்வி முறைதான் சிறப்பாக உள்ளது என கல்வியாளர்கள், மற்ற மாநில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
242 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும், 7,500 ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் 80,000 ஸ்மார்ட்போன் வழங்கப்படும் எனவும் தனியார் பள்ளிகளைப் போன்று அரசு பள்ளிகளிலும் ஷூ சாக்ஸ் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். பல்வேறு பணிகளில் 7500 உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களை காலிப்பணியிடங்களுக்கு பயன்படுத்த உள்ளோம், இல்லை எனில் அரசுக்கு ஆயிரத்து 400 கோடி நிதி சுவை ஏற்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் பிப்ரவரி 13ஆம் தேதி தேர்வு வாரியம் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.