பெண் ஒருவர் வாடகைக்கு பயந்து போய் இறந்த தனது தாயை 10 ஆன்டுகளாக பிரீஸரில் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசித்து வருபவர் யூமி யோஷினோ(40). வடக்கை வீட்டில் தனது தாயுடன் வாழ்ந்து வந்த இவர் வீட்டு வாடகை ஒழுங்காக கட்டி வராததால் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் இருந்த வீட்டை சுத்தம் செய்வதற்காக பணியாளர் ஒருவர் அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டினுள் இருந்து ஃப்ரீஸரில் திறக்கும் போது அதில் வயதான பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இதையடுத்து பணியாளர் அலறியடித்து வெளியே ஓடிவந்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து யூமியை அழைத்து விசாரித்தபோது விசாரணையில், “பிரீசரில் இருந்தது தனது தாயின் சடலம் எனவும், அவர் இறந்து 10 வருடங்கள் ஆகின்றது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தாய் இறந்த செய்தியை வெளியே கூறினால், தானும் வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற பயத்தில் அவர் தன்னுடைய தாயை பத்து வருடங்களாக பெரிய பிரீஸரில் அடைத்து வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் குடியிருந்த வீட்டின் ஒப்பந்தம் அந்த இறந்த பெண்ணின் பெயரில் இருந்ததால் இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் யூமியை கைது செய்துள்ளனர். இதையடுத்து வாடகைக்கு பயந்து தாயின் சடலத்தை பத்து வருடங்களாக பிரீஸரில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.