கனடாவில் கடந்த வருடம் மாயமான பெண் குறித்து தற்போது வரை தகவல் எதுவும் கிடைக்காததால் காவல்துறையினர் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கனடாவிலுள்ள வின்னிபெக் என்ற பகுதியில் வசித்து வந்த 29 வயதுள்ள இளம்பெண் ஜியேன்னி மெக்கன்னி. இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி என்று மாயமானார். ஆனால் இவரின் குடும்பத்தினர் கடந்த மாதம் 26ம் தேதி அன்று தான் காவல்துறையினரிடம் மெக்கன்னி மாயமானதாக புகார் அளித்துள்ளனர். இதனால் மெக்கன்னியின் குடும்பத்தினர் இவ்வளவு நாட்கள் கழித்து புகார் அளித்ததற்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
மேலும் காணாமல் போன அந்தப் பெண் 5 அடி 6 அங்குலம் உயரம் உள்ளவர். மேலும் அவர் மாயமாகி ஒரு மாதம் கடந்த நிலையில் அவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காததால் காவல் துறையினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் மெக்கன்னி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.