மனைவியை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சிவக்குமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் விரைந்து வந்து சிவகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் கணவன் இறப்பு குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் அன்னலட்சுமி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.