Categories
உலக செய்திகள்

குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆயிட்டு… நான் மறுபடியும் வேலைக்கு போறேன் – அறிவித்த போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவி…!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவியான கேரி சைமண்ட்ஸ் குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் வனவிலங்கு தொண்டு நிறுவனத்தில் தகவல் தொடர்பு தலைவர் பணியை தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிற்கும் அவரது  வருங்கால மனைவி கேரி சைமண்டிற்கும் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆன நிலையில்  கேரி சைமண்ட் பணி புரியும் Aspinall Foundation  என்ற விலங்கு தொண்டு நிறுவனம் மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் மீண்டும் பணிக்கு செல்ல திரும்புவதாக அறிவித்துள்ளார்.

விலங்குகள் நல ஆர்வலரான கேரி சைமண்ட் Aspinall Foundation  நிறுவனத்தின் தகவல் தொடர்பு தலைவராக மீண்டும் பணியில் ஈடுபட உள்ளார் . இதற்கிடையே 2020ஆம் ஆண்டு PETA அமைப்பு கேரி சைமண்டிற்கு  பிரிட்டனின் “Person of the Year ” என்ற பெயரை வழங்கியது. அவர் பணியாற்றும் Aspinall Foundation என்ற  விலங்குகள் தொண்டு நிறுவனம் 1984ஆம் ஆண்டு ஜான் ஆஸ்பினால்  என்ற மிருகக்காட்சிசாலை உரிமையாளரால் தொடங்கப்பட்டது.

Categories

Tech |